அரச நிறுவனங்களில் தகவல் அதிகாரிகள் நியமனம் – ஊடக அமைச்சின் செயலாளர்!

நாட்டிலுள்ள தொண்ணூறு வீதமான அரச நிறுவனங்களில் தகவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் தற்போது 670 அரச திணைக்களங்களில் தகவல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடக அமைச்சின் செயலாளர் பீ.கே.எஸ்.ரவீந்திர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி தொடக்கம் தகவல் அறியும் சட்டமூலம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது. பெப்ரவரி 17ஆம் திகதிக்கு முன்னதாக அனைத்து அரச நிறுவனங்களிலும் தகவல் அதிகாரிகளை நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
தகவல் அதிகாரிகள் நியமிக்கப்படும் வரை குறித்த திணைக்களங்களின் தலைவர்கள், கோரப்படும் தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.
அத்துடன் தற்போதைக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெளிநாட்டு நிதியுதவியில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்துக்கு சேவைகளை வழங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் பொதுமக்கள் கோரும் தகவல்களை அளிக்கும் கடமைப்பாட்டைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|