அரச நிறுவனங்களில் காகித பயன்பாட்டை குறைக்க திட்டம் – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, June 8th, 2022

அரச நிறுவனங்களில் காகிதங்களுக்காக செலவிடப்படும் பணத்தை சேமிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படுவதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அரச நிறுவனங்களின் வருடாந்த மற்றும் அரையாண்டு அறிக்கைகளை நாடாளுமன்றம், கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு E book வடிவில் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல்வேறு படிவங்களை நிரப்புவதற்கு பதிலாக ஒரு படிவம் வழங்கப்பட்டு, WhatsApp போன்ற சமூக ஊடக வழிமுறைகளைப் பயன்படுத்தி உரிய தரப்பினருக்கு படிவங்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு படிவங்கள் மற்றும் அறிக்கைகளுக்கான காகிதத்திற்காக பெருந்தொகை செலவு ஏற்படுகிறது. புதிய வேலைத்திட்டத்தின் கீழ், அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களைச் சமூக ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் திரைகளில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய வேலைத்திட்டத்திற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: