அரச திணைக்களங்களில் ஆண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்கக் கூறிக் கோரிக்கைகள் முன்வைக்கின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படலாம்- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

Monday, October 17th, 2016

அரசியலைத் தவிர  ஏனைய துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அரச திணைக்களங்களில் பெண்கள் தற்போது 40 சதவீமானவர்களாக காணப்படுகின்றனர். பெண்களின் சதவீதம் நூறு வீதம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சிலகாலங்களில் ஆண்களின் பிரநிதித்துவத்தை அதிகரிக்கக்கோரி கோரிக்கைகள் முன்வைக்கின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படலாம். எனினும்,அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்து காணப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன்  தெரிவித்தார்

இன்று திங்கட்கிழமை(17)முற்பகல்-10 மணி முதல் யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் “உள்ளுராட்சி திணைக்களங்களில் பெண்களுடைய பங்களிப்பை வலுப்படுத்தல்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட  ஆய்வாளர் சிஹாஜினி விஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட யாழ். மாவட்ட அராசாங்க அதிபர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலகில் முதல் பெண் பிரதம மந்திரி இலங்கையில் உருவாகிய போதும் உள்ளுராட்சித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் வகிபங்கு குறைவாகவே உள்ளது. குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறுகியதாகக் காணப்படுகின்றது.இந்த நிலை மாற்றப்பட வேண்டும். பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும். பெண்களின் குரல் பாராளுமன்றத்தில் வலுவாக ஒலிக்க வேண்டும். இதன் ஆரம்பகட்டமாக உள்ளுராட்சித் தேர்தலில் பெண்களிற்கு 25 சதவீத ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியலை தவிர  ஏனைய துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து காணப்படுகிறது. ஆயினும் அரசியலில் பின்னிப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றிற்கான தீர்வினை  முன் வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

unnamed

Related posts: