அரச தலைவர் மேற்கொண்ட தீர்மானங்களே தற்போது அரசதுறை மற்றும் தனியார்துறையை மீள புத்துயிர் பெறச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதிலும் அரசியல்துறை மற்றும் பொருளாதார துறைகளுக்கும் இந்த காலம் மிகவும் முக்கியமான காலமாகும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொட்டாவை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
எதிர்க்கட்சியினர் எத்தகைய விமர்சனங்களை மேற்கொண்டாலும் கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களையும் ஆளும் கட்சியை மட்டுமன்றி எதிர்க்கட்சியினரையும் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி முன்னுரிமை அளித்ததுடன் அதற்காக அரசாங்கம் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டது என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
அரச தலைவர் மேற்கொண்ட அத்தகைய தீர்மானங்களே தற்போது அரசதுறை மற்றும் தனியார்துறையை மீள புத்துயிர் பெறச் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒருபுறம் அரசாங்கம் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. மறுபுறம் இந்த நூற்றாண்டில் நாமும் நாடும் முழு உலகமும் கொரோனா வைரஸ் சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள தருணம் இது.
பல கட்சிகள் ஒன்றிணைந்து அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ஆகியோரின் தலைமைத்துவத்தில் அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ள நிலையில் எம் முன்னிலையில் சவால்கள் நிறைந்துள்ளன.
பல்வேறு கட்சிகள் இணைந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இந்தச் சந்தர்ப்பத்தை நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் கவனம் செலுத்துவதற்காக உபயோகித்ததுடன் நாட்டைப் பாதிக்கும் வகையில் மக்கள் வழங்கிய ஆணையை நான் ஒருபோதும் உபயோகப்படுத்தவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
|
|