அரச – தனியார் வைத்தியசாலைகளை இணைத்து சுகாதார சேவை – அமைச்சர் ராஜித்த!

Saturday, September 23rd, 2017

நாட்டில் அரச, தனியார் வைத்தியசாலைகளை இணைத்து சிறந்த சுகாதார சேவை ஏற்படுத்தப்படும் என சகாதார போஷாக்க மற்றும் சுதேச வைத்தியத்தறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான கட்டளையும், தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை சட்டத்தின் கீழான இரண்டு கட்டளையும் பாராளுமன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்டன.

இதுதொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன  சகல தனியார் வைத்தியசாலைகளுக்கும் சிகிச்சைகளுக்கான உரிய கட்டணங்களும் ஒழுங்குறுத்தப்பட இருக்கின்றன. மருத்துவ சேவைக்குத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

சைற்றம் மருத்துவக் கல்லூரி சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவப் பட்டத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட இருக்கின்றது. இது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கை மருத்துவப் பேரவையின் அதிகாரிகளுடன் இடம்பெறவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: