அரச சேவை முகாமைத்துவ ரீதியாக பலவீனமடைந்துள்ளது -அமைச்சர் ராஜித சேனாரத்ன!

Tuesday, November 15th, 2016

 

நாட்டின் அரச சேவையானது முகாமைத்துவ ரீதியாக மிகவும் பலவீனமடைந்துள்ளது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார ஊழியர்களின் மனித வளத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றில் இன்று(14) கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் ராஜித இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரச நிறுவனங்கள் சுமார் ஒரு மாதங்களில் எடுக்கும் முடிவுகளையும் தீர்மானங்களையும் தனியார் நிறுவனங்கள் ஒரே நாளில் எடுக்கின்றன.

காலம் கடந்து போன அரச சேவை சட்ட திட்டங்களில் சிக்கியிருக்கும் ஊழியர்களை அதில் இருந்து அகற்றி வலுவான அரச சேவையை உருவாக்க தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

z_p05-Sri-Lanka_s

Related posts: