அரச சேவையில்  60 வயதுவரை தொடர முடியும்!

Saturday, July 8th, 2017

கல்வித்துறை உத்தியோகர்கள் மாகாண அரச சேவையில் கடமையாற்றுவதை நோக்காகக் கொண்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அரச சேவை ஆணைக்குழுவின் அதிகார கையளிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட 04/2003 ஆம் இலக்க சுற்றுநிரூபம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவின் தகவல் அலுவலர் திருமதி ஆர்.டி.பீ.எஸ்.தருமசேன அறிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல் ஒன்றுக்கமைய இந்தப் பதிலை வழங்கியுள்ளதுடன், இலங்கை கல்வி நிர்வாக சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவை தொடர்பான விடயங்களை கையாள்வதற்கான அதிகாரம் 1989/29ஆம் இலக்க 2016.10.19 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்விச் சேவை குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தரப்பட்டுள்ளது.

இதுதவிர அரச சேவையில் ஒருவர் 60 வயது வரை சேவை நீடிப்பின்ற கடமையாற்ற முடியும் எனவும் கட்டாய ஓய்வைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் 60 வயது வரை ஒருவரை ஓய்வு பெற செய்விக்க முடியாது எனவும் 55 வயது முதல் 60 வயது வரையான காலப்பகுதிக்கும் அலுவலரின் விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறலாம் எனவும் மேற்படி தகவல் அதிகாரி அரச சேவை ஆணைக்குழு சார்பாக தகவல் வழங்கியுள்ளார்.

மேற்படி தகவல்களை தகவல் அறியும் சட்டத்திற்கமைய இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம், அரச சேவை ஆணைக்குழுவிடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts:

பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது – மகிந்த...
இலங்கையர்கள் அனைவரும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ கோ...
ஞாயிரன்றே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித்தீர்மானம் - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ...