அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!
Saturday, September 17th, 2022அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எனவே, அரசு நிறுவனங்களில் ஆள் பற்றாக்குறையோ, சேவையை வழங்குவதில் குறைபாடுகளோ ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.
உதாரணமாக, அரசாங்கம் 2020 இல் 60,000 பட்டதாரிகளை பொதுச் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்தது.
எனினும் அவர்களில் பலர் பட்டதாரிகளுக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்த பட்டதாரிகளை கொண்டு அரச துறையில் உள்ள வெற்றிடங்களை அரசாங்கம் நிரப்ப முடியும் என அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை நிதி மேலாண்மை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை நிதி முகாமைத்துவம் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய பொருளாதார முகாமைத்துவத்திற்கு தேவையான மூலோபாய வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மீட்சி மற்றும் புத்துயிர் தொடர்பாக பிரதமர் உட்பட ஆறு பேர் கொண்ட அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|