அரச சேவைப் பயிற்சிக்காக 4,053 பட்டதாரிகள் சேவையில் இணைப்பு!

Wednesday, August 1st, 2018

அரச சேவைப் பயிற்சிகளின் நிமித்தம் 4,053 பட்டதாரிகளை சேவையில் இணைக்கவுள்ளதாக அரச கொள்கைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சரவை அனுமதிக்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதி, இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள அனைவரும் பல்கலைக்கழக உள்வாரிப் பட்டதாரிகள் என அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் 15,000 பட்டதாரிகள் வருட இறுதிக்குள் அரச சேவையில் பயிற்சிகளுக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: