அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை – அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் தகவல்!

Thursday, April 15th, 2021

அரச சார்பற்ற 38 அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ராஜா குணரத்ன, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், இந்த விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புக்களில், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் அடங்குவதாக அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச்  செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.

Related posts:


குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!
எதிர்வரும் திங்கள்முதல் அனைத்து தொழிலிடங்களும் வழமைக்கு திரும்பும் - வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உட...