அரச காவலர்களின் வேலை நேரத்தில் 68 வருடங்களின் பின்னர் மாற்றம்!

Thursday, December 14th, 2017

அரச சேவையில் கடமையாற்றும் காவலாளிகள் தொடர்பிலான வேலை நேரம் பற்றிய சுற்றறிக்கையொன்றை 68 வருடங்களுக்கு பின்னர் பொது நிர்வாக அமைச்சு திருத்தி புதிய சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

1949 ஆம் ஆண்டு திறைசேரி காவலாளிகள் தொடர்பான சுற்றறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. அதற்கமைய காவலாளி ஒருவரின் வேலைநேரம் 12 மணித்தியாலமாக வரையறுக்கப்பட்டிருந்தது.

இதனை திருத்தி பொது நிர்வாக அமைச்சு 29.2017 இலக்கமிட்டு 01.12.2017 முதல் செயற்படும் வண்ணம் ஒரு காவலாளியின் கடமை நேரம் 9 மணித்தியாலம் எனவும் இதற்கு மேல் கடமையாற்றினால் அவருக்கு மேலதிக நேரப்படி செலுத்தப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவலாளிகள் வாரத்தில் 6 நாட்கள் கட்டாயம் கடமை புரிய வேண்டும். வாரத்தில் ஒரு நாள் ஓய்வு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.

நிறுவனத்தில் கூடுதலான காவலாளிகள் உள்ள பட்சத்தில் 8 மணித்தியாலங்கள் கொண்ட மூன்று சுழற்சி முறையை பயன்படுத்தி மூவரை பணிக்கமர்த்தலாம் எனவும் மேற்படி சுற்று நிருபத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related posts:

பகைமையை தூண்டும் கருத்துக்களால் வன்முறைகள் இடம்பெறலாம் - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை!
அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உதவி - அவுஸ்த...
எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் - விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிக...