அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்து பணியாற்றுவதற்கு விரைவில் விசேட முறைமை – விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, June 7th, 2022

அரச உத்தியோகத்தர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்வதற்கான முறைமையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது மதிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் பணிக்கு செல்வதில் ஏற்படும் அதிக செலவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: