அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை – வெளியானது விசேட சுற்றறிக்கை!
Wednesday, June 22nd, 2022அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால் இந்த விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பில்லாத வகையில் அரச ஊழியர்கள் தமது சேவைக்காலத்தில் 5 வருடங்களுக்கு உட்பட்டு, வெளிநாடு செல்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையினை பெற்றுக்கொள்ள முடியுமென அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாபன விதிக்கோவையில் தற்போதுள்ள ஏற்பாடுகளுக்கு புறம்பாக மறுஅறிவித்தல் வரை விசேட ஏற்பாடுகளின் கீழ் அரச ஊழியர்களுக்கு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு சம்பளமில்லாத விடுமுறை வழங்க கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|