அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – பிரதமர் ரணில் தெரிவு!

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வைக் கொண்டுவர பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த சம்பள உயர்வு அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் வரவு செலவுத் திட்ட உரையின்போது தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கோரிக்கையை பிரதமர் விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பள உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
2015 இல் பொதுத்துறையினருக்கான சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
இ. போ.சபைக்கு சொந்தமான பழைய பேருந்துகளை மீள்பாவனைக்கு உட்படுத்த தீர்மானம்!
மீண்டும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு!
|
|