அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை – அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அறிவிப்பு!

Thursday, April 7th, 2022

அரச ஊழியர்களின் இம்மாதத்திற்கான சம்பளம் தொடர்பில் நேற்றையதினம் அறிவிப்பொன்று வெளியாகியிருந்த நிலையில் இன்றையதினம் மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் இம்மாதத்திற்கான சம்பளம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரச சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மேலும் தெரிவிக்கையில் –

நிதியமைச்சர், மத்திய வங்கி ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இதுவரையிலும் நியமிக்கப்படாததன் காரணத்தினால் புத்தாண்டுக்கு முன்னர் சம்பளம் வழங்குவது சாத்தியமற்றது என்று சில தரப்பினர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை முன்னைய வருடங்களை போன்றே குறிப்பிட்ட தினத்திற்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, சம்பளம் வழங்கும் திகதி அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரச ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்...
நெருக்கடியான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை - புகையிரத ...
சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் - அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!