அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட மாட்டாது – நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Wednesday, April 27th, 2022

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

000

Related posts: