அரச ஊழியருக்கு விரைவில் வாகன இறக்குமதி அனுமதி!

Sunday, February 10th, 2019

அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி ரத்து செய்யப்படவில்லை. அது தற்காலிகமாகவே இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கையிருப்பைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. அத்துடன் ஜனவரி மாதத்தில் பெருமளவு கடனைச் செலுத்த வேண்டியிருந்தது.

ஆனால் நாட்டின் தேவையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான வாகன உரிமப் பத்திரம் இடைநிறுத்தப்படவில்லை. வாகன இறக்குமதியே இடைநிறுத்தப்பட்டுள்ளது.

உரிமப் பத்திரம் உள்ள அனைவருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்படும். அதன்படி எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

Related posts:

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் – நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளி...
கடற்றொழில் அமைச்சினால் புதிய சட்ட திருத்தங்கள் அறிமுகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட...
தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் - சுற்றுலா முகவர் நி...