அரச ஊடக நிறுவனங்களுக்கு புதிய தலைவர்கள்!
Monday, October 29th, 2018இலங்கையின் பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு மூன்று பதில் தலைவர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நியமனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சட்டத்தரணி சரத் கொன்கஹகே, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்க மற்றும் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக வசந்த பிரிய ராமநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார நெருக்கடியை மீளக்கட்டியெழுப்ப நாளை சர்வதேச நாணய நிதியத்துடன் – கலந்துரையாடல்!
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் கன உலோகங்கள் இல்லை - பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு ...
யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ் நல்லூரில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுப்பு!
|
|