அரச உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே ஆளுநரின் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்

Wednesday, January 24th, 2018

வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு விடுமுறைக்காக விண்ணப்பிக்கும்போது விண்ணப்பங்களை ஆளுநரின் அனுமதி பெறுவதற்காக ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அமைச்சுக்களுக்கு ஆளுனர் செயலகத்தால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகளவான உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு விடுமுறைகள் பெற்றுச் செல்கின்றனர்.

சில அதிகாரிகள் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்காக விடுமுறை பெறுகின்றனர். இந்த விடுமுறைகள் தொடர்பில் ஆளுனரின் அனுமதி பெறப்பட்டு வருகின்றது. அதிகாரிகள் விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் காலம் குறுகியதாகக் காணப்படுகின்றது.

வெளிநாடு செல்வதற்காக விண்ணப்பிக்கின்றனர். எனினும் அதற்கான அனுமதி கிடைப்பதற்கு முன்னரே அவர்கள் தேவையின் நிமித்தம் சென்று விடுவார்கள். இதனால் பல சிக்கல் நிலமை தோன்றுகின்றது. விடுமுறைக்கான அனுமதி ஒரு வார காலத்துக்கு முன்னர் செயலகத்துக்கு கிடைத்தால்தான் பதில் கடமை உத்தியோகத்தர்களை நியமிக்கலாம். வெளிநாட்டு விடுமுறைக்கான சரியான காரணங்களைப் பரிசீலனை செய்யலாம்.

ஆகவே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு விடுமுறை அனுமதி தொடர்பில் அவர்களின் திணைக்களங்கள், அமைச்சுக்களுக்கு முற்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: