அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்க புதிய சட்டம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
Tuesday, November 26th, 2019பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி மற்றும் புத்சாசன அமைச்சரகங்களில் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
நிதி அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்ற பிரதமர் அரச உத்தியோகத்தர்களை பாதுகாக்க எதிர்வரும் நாட்களில் சட்டம் ஒன்றை நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றார்.
அவர் சமய வழிபாடுகளுடன் இன்று முற்பகல் 10.15 அளவில் தமது கடமைகளை ஏற்றார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவான நிலையை அடைந்துள்ளது. சுற்றுலாதுறை உயிர்த் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளது. அரசாங்கத்தில் கடன் சுமை நூற்றுக்கு நூறு வீதத்தை எட்டியுள்ளது. ரூபாவின் வீழ்ச்சியால் அரச கடன் சுமையில் மேலும் ஆயிரத்து 760 ரூபா சேர்ந்துள்ளது.
பிணை முறி மோசடி இடம்பெற்றுள்ளது FCID போன்ற நிறுவனங்கள் மூலம் அதை மறைப்பதற்கு அனைத்தையும் செய்துள்ளனர். அரச அதிகாரிகள் தீர்மானம் எடுப்பதை தடுத்தனர் அதன் மூலம் அரச சேவை செயலற்று போயுள்ளது.
அதனால் முன்னைய அரசாங்கத்திற்கு மக்கள் சிறந்த பதிலை வழங்கியுள்ளனர். அந்த ஊழல் நிறைந்த அரசாங்கத்தை மக்கள் தோற்கடித்தனர். எனது 2005 – 2014 ஆம் ஆண்டு வரையான ஆட்சியை ஒத்தது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம். நாம் ஒருபோதும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதில்லை. நாம் சொல்வதை செய்வோம்.
எல்லோரும் FCID க்கு அழைப்பார்கள் என பயந்தனர். ஆகவே உங்களை நாம் சட்டம் ஒன்றை உருவாக்கி பாதுகாப்போம்.
அதன்பிறகு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புத்தர் சாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.இதன் போதும் பிரதமருக்கு ஆசி வேண்டு மதஅனுஸ்டானங்கள் இடம்பெற்றன.
Related posts:
|
|