அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் ஒத்திவைப்பு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெப்ரவரி 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு விடுத்தமையை அடுத்து அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் பெப்ரவரி இறுதி வரை தள்ளி வைக்கப்பட்டது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றமே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கான இடமாற்றம் பெப்ரவரி 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் இடமாற்றங்கள் பெப்ரவரி 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கான இடமாற்ற கால நீடிப்பு பொது நிர்வாக அமைச்சு மற்றும் மாகாண அமைச்சுகளால் இன்னும் அறிவிக்கப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவித்தன.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை நிறைவடைந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.
Related posts:
|
|