அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அலைபேசி உரையாடல்கள்!
Tuesday, September 25th, 2018
அரச தலைவரைக் கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரது எனக் கூறப்படும் அலைபேசி உரையாடல்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அலைபேசி உரையாடலின் உள்ளடக்கங்கள், நேரம், பதிவாகியுள்ள குரல், மென்பொருள் ஊடாக ஏதேனும் திருத்தங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பவை தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸ் அத்தியட்சகர், முதன்மை பொலிஸ் மற்றும் பிரதிப்பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் அலுவலக அதிகாரிகள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related posts:
யுவதியை கடத்திய இருவர் கைது!
உத்தேச கணக்காய்வாளர் சட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை!
அபாய கட்டத்தில் நாடு - முகங்கொடுப்பதற்கு தயாராகுமாறு அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!
|
|