அரச இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!

Wednesday, May 17th, 2017

காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் இணையத்தளம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினம் உறுதியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் சைபர் தாக்குதல் குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவே காலி மாவட்ட செயலாளர் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஜிந்தாபாத், இஸ்லாம் மதத்திற்கு ஜிந்தாபாத், முஸ்லிம்களுக்கு ஜிந்தாபாத், பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஜிந்தாபாத் மற்றும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. குழுவிற்கு ஜிந்தாபாத் என அந்த இணையத்தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த ஹெக்கர் குழுவினரால் குறித்த இணைத்தளத்தை முடக்கியதன் பின்னர் அதில் பதிவொன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதில் காஷ்மீர், சிரியா மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் விடுவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மொஹமட் பிலால் என்ற குழுவினரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts: