அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டு!
Friday, June 9th, 2023அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை சமர்ப்பித்த உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து அரச நிறுவனங்களும் வரி செலுத்துவோரின் பணத்தினாலேயே பராமரிக்கப்படுவதாகத் தெரிவித்த விஜேசிறி,
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்திற்கு சொந்தமான கட்டடத்திற்கு மாதாந்தம் 13 இலட்சம், தேசிய லொத்தர் சபைக்கு மாதம் 65 இலட்சம், கொள்ளுப்பிட்டியில் உள்ள மின்சார அமைச்சுக்கு மாதம் 20 இலட்சம், மின்சார சபை நகர அலுவலகத்திற்கு மாதம் 20 இலட்சம், மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் கட்டடத்திற்கு மாதாந்தம் 20 இலட்சம் என பணம் வீணடிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இம்மாத இறுதிக்குள் 3 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விநியோகிக்க தயார் - உலக சுகாதார ஸ்தாபனம் அறிவி...
டெங்கு தொற்று - அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!
மார்ச் 20 ஆம் திகதியுடன் முடிவடையும் உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் - அனைத்து உள்ளூராட்சி மன்றங...
|
|