அரச அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்துகொள்கின்றனர்- பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

Monday, July 27th, 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை செயற்பாடடுகளில் அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சில உயர் அரச அதிகாரிகள் நேரடியாகவும் சில அதிகாரிகள் மறைமுகமாகவும் கட்சிகளினதும் வேட்பாளர்களினது பிரசார நடவடிக்கைகளில் பங்கெடுப்பது குறித்த முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் முக்கிய பதவிகளை வகிக்ககூடியவர்கள் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்வதும் ஆதரிப்பதும் சுதந்திரமான நீதியான தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகஹ ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு மேற்பார்வை மற்றும் நிறைவேற்று தரத்தில் உள்ள அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடுவது பிரச்சாரத்தில் ஈடுபடுவது ஆதரிப்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக அவ்வாறான அதிகாரிகள் சுதந்திரமான நீதியான தேர்தலுக்கு உதவவேண்டும் என ரோகன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே அரச உயர் நிலை அதிகாரிகள் எந்தவித அரசியல் செயற்பாடுகளில் கலந்துகொள்ள கூடாதென்பதுடன் அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு பகிரங்கமாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: