அரசு வழங்கிய வாக்குறுதிகள் எவை? தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் வெளிப்படையாக கூறவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016

ஆட்சி மாற்றத்தினை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அவை தீர்க்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று தமிழ் மக்களின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வட்டுக்கோட்டையில் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது என்றால், அந்த உறுதி மொழிகள் எவை என்பதை சம்பந்தன் தமிழ் மக்களிடம் வெளிப்படையாக தெரிவிக்காமல் ஏன் மறைக்கின்றார். அத்துடன் தமிழ் மக்களுக்கு மறைக்கும் அவசியம் அரசாங்கத்திற்கு இருக்குமானால், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தரப்போவது இரகசியமான தீர்வா? என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு எழுகின்றது. அல்லது உறுதியளித்திருப்பதாக சம்பந்தன் கூறுவது உண்மைக்குப் புறம்பான செய்தியா?

அரசாங்கத்துடன் தமிழ் மக்களின் சார்பில் என்ன பேசப்பட்டது?

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு என்ன உறுதி மொழிகளை வழங்கியுள்ளது?

புதிய அரசாங்கம் பதவி ஏற்று 16 மாதங்களாகின்றது. இதுவரை தமிழ் மக்களுக்காக அரசாங்கம் செய்தது என்ன?

அல்லது புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு தாமே கொண்டு வந்ததாக கூறுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை அணுகி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பெற்றுக் கொடுத்த தீர்வுகள் என்ன?

மறுபக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள், சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் மூலமாக முன் வைத்திருக்கும் கேள்விகள் பலவற்றில், ஆட்சி மாற்றம் மாற்றங்களைத் தரும் என எதிர்பார்த்தபோதும் எள்ளளவேனும் முற்போக்கான செயற்பாடுகள் அல்லது ஆக்கபூர்வமான செயற்பாடுகள் இடம்பெறாத நிலையில் எமக்கு வாக்களித்த மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது என்றும் கூறியிருக்கின்றார். அந்தக் கேள்விகளுக்கும் சம்பந்தன் வெளிப்படையாக பதிலளிக்க வேண்டும் என தனது முகநூலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் பதிவிடப்பட்டுள்ளதாவது –

சம்பந்தன் தமிழ் மக்களிடம் கூறுவதைப்போல் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உறுதி வழங்கியிருந்தால் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறான கேள்வியை கேட்டிருக்கமாட்டார்.

இவற்றைப்பார்க்கும்போது அரசாங்கம் எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை. அரசாங்கம் எதையாவது செய்தால் அது நாங்கள் கேட்டதுதான் என்று கூறுவதற்கும், அரசாங்கம் எதையும் செய்யாவிட்டால், அரசாங்கம் வாக்குறுதி வழங்கியபடி எதையும் செய்யவில்லை என்று கூறுவதற்கும் வசதியாகவே திரு.சம்பந்தன் தெளிவற்ற கதையை தமிழ் மக்களிடம் கூறிவருகின்றார்.

வாக்குறுதி வழங்கியதற்கமைய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வை தரவில்லை என்றால், அரசாங்கம் கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டது என்பதுதானே அர்த்தம். இதற்குப் பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் தலைவர் பதவியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதற்காக பற்றிப் பிடித்துக் கொண்டு இருக்கின்றது

Related posts: