அரசு திணைக்களங்களில் நியமனம் பெறுபவர்கள் மக்களிற்கான உயரிய பணியை செய்ய வேண்டும் – வடமாகாண பிரதம செயலாளர்!

அரசு திணைக்களங்களில் நியமனம் பெறுபவர்கள் மக்களிற்கான உயரிய பணியை சேவை மனப்பாங்கோடு செய்ய வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் தெரிவித்தார்.
வடமாகாண திணைக்களங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு பணிக்கு அமர்த்துவதற்கான புதிய வள நியமனங்கள் வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடமாகாணங்களை பொறுத்தவரையில் நியமனங்கள் வழங்குவதானது கஸ்டமான ஓரு விடயமாகும். ஆனபோதும் ஜனாதிபதி, பிரதமர், வடமாகாண ஆளுனர், கலந்துரையாடி அவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே 197 பேருக்கு இன்றையதினம் நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் இதன்போது தெரிவித்தார்.
Related posts:
முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் இம் மாதத்திற்குள் பூர்த்தி!
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யுவதி விமான நிலையத்தில் கைது!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!
|
|