அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!

Sunday, September 19th, 2021

அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் கீழ் புதிய நிறுவனத்தை உருவாக்கி, அதன் சந்தை பெயரில் எரிவாயுவை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் அண்மையில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை சக்திவலு அமைச்சின் கீழ் இயங்கும் கனியவள கூட்டுதாபனத்தின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

இதனிடையே எரிவாயு நிறுவனத்தின் அமைவு குறித்த சாத்தியகூறுகள் குறித்து ஆராயப்படுவதாக கனியவள கூட்டுதாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: