அரசில் இருந்து விலகி எதிர்க்கட்சியாக செயற்படுவோம்: அமைச்சர் ஜோன் செனவிரத்ன!

Monday, July 17th, 2017

அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேய்ந்து போகுமே அன்றி வலுவடையாது என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு அரசாங்கத்தின் உடன்படிக்கை டிசம்பர் மாதமே முடிவடையவுள்ளதால், அதுவரை அரசாங்கத்தில் இருக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts: