அரசில் இருந்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் – மூன்றில் இரண்டு பலத்தையும் அரசாங்கம் இழக்காது – அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிப்பு!

Sunday, November 28th, 2021

ஆளும் கட்சியில் இருந்து எவரேனும் வெளியேறினால் அதற்கு எந்த தடையும் இல்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை எவரேனும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக எதிர்க்கட்சியில் இருந்து ஒரு குழு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு அதிகாரத்தை இழக்காது எனவும், அந்த இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பது தமக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: