அரசியல் ஸ்திரமின்மை பொருளாதார முன்னேற்றத்தை தாமதமாக்கலாம் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
Tuesday, July 12th, 2022அரசியல் ஸ்திரமின்மை காரணமாக இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் தாமதமாகலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஸ்திரமான அரசியல் நிர்வாகத்தின் தேவை, சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது மற்றும் நிதி மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்க வேண்டியது அவசியம் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகிறார்.
இதேவேளை, இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் செய்வதற்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 577 பேர் கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
எரிபொருள் விலை அதிகரிப்பு - நிதியமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் நாடாளுமன்றில் - ஹர்ஷ எம்...
|
|