அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் – உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அறிவிப்பு!
Tuesday, February 22nd, 2022விசேட பண்ட – சேவை வரி சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் விசேட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விசேட வரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகளுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் அபிப்பிராயத்தை பெறுதல் அவசியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு இன்று(22) காலை அறிவிக்கும் போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.
இந்த சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்கள் அரசியலயமைப்புக்கு முரணாக காணப்படுவதால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இதன் நடைமுறை சாத்தியம் கருதி யோசனை முன்வைத்துள்ள உயர்நீதிமன்றம், அரசியல் யாப்புடன் ஒத்திசையாத சரத்துகளை மாத்திரம் திருத்தி, அரசியல் அமைப்புடன் இசைய செய்து, அதனை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும் என்று தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
.
Related posts:
|
|