அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையின் தீர்மானம் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையானது ஜனாதியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதுடன், அது இன்றையதினம் நாடாளுமன்றிலும் முன்வைக்கப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் அரசியல் துறை சார்ந்தோர், அரச அதிகாரிகள், அரச கூட்டுத்தாபன சேவையாளர்கள், இராணுவம் மற்றும் காவல்துறையினர் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மது வரிக் கட்டளைச் சட்டத்தினை மீறி மதுபானம் விற்பனை செய்த அறுவருக்கு அபராதம்!
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பணியாளர்களை சார்ந்திருப்பவர்கள் தானாக முன்வந்து வெளியேற...
|
|