அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் புதிதாக 162 முறைப்பாடுகள் பதிவு!

Wednesday, August 12th, 2020

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் புதிதாக 162 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் 48 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய 114 முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, இதுவரையிலான காலப்பகுதியில் மொத்தம் ஆயிரத்து 842 முறைப்பாடுகள், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: