அரசியல் பலம் எம்மிடம் இருக்குமானால் வாழ்வியலை மட்டுமல்ல அரசியலுரிமையையும் வென்றெடுத்து தருவோம் – ஈ.பி.டி.பியின் காரைநகர் நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணன்!

Thursday, November 10th, 2016

வறுமையால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்களது கல்விச் செயற்பாடுகளை சீர்தூக்கி நிறுத்துவதற்காக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆயராது பாடுபட்டு உழைத்துள்ளது. அதன் வெளிப்பாடுகள்தான் வறுமையை எதிர்கொண்டிருந்த போதிலும் எமது பிரதேசத்தில் ஏழை மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையாது தொடர்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றது என ஈழமக்கள்கட்சியின் கரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் வீரமுத்து கண்ணண் தெரிவித்துள்ளார்.

காரைநகர் கல்வந்தாழ்வு சிறி முருகன் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா கடந்த திங்களன்று முன்பள்ளியின் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் உரையாற்றிய அவர் –

DSC06152 - Copy

கடந்த காலங்களில் இப் பிரதேசத்தில் வசிக்கின்ற மக்களுக்கான உதவிகள் மற்றும் அடிப்படைத் தேவைகளை எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதிகளவில் பெற்றுத் தந்துள்ளார். இதனால் பல மாணவர்களது கல்விச் செயற்பாடுகள் மேம்பாடடைந்துள்ளது.குறிப்பாக இந் நிகழ்வினை நடத்திக் கொண்டிருக்கும் இந்த முன்பள்ளியின் புனரமைப்புக்களையும் தேவையான தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றையும் மாணவர்களது முன்னேற்றத்திற்கு பெற்றுக்கொடுத்தள்ளோம்.

எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களுக்கு அரசியல் அதிகாரங்களை மக்கள் அதிகளவில் பெற்றுக்கொடுத்து அவரது கரத்தை வலுச்சேர்ப்பார்களாக இருந்தால் வறுமையின் பிடியிலிருந்து மட்டுமல்லாது அரசியல் உரிமைகளுடன் கூடிய சிறந்ததொரு வாழ்க்கையையும் பெற்றுத்தருவார் என தெரிவித்தார்.

இதனிடையே வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி சிறப்பித்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC06117

Related posts: