அரசியல் நெருக்கடியை தீர்க்க விரைந்து செயற்பட வேண்டும் – மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை!

Tuesday, February 20th, 2018

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடியை தீர்ப்பதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிகார மோதலில் ஈடுபடுவதை விட்டு நாட்டு மக்களை பற்றி சிந்தித்து அரசியல் நெருக்கடியை தீர்த்து வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொரள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அத்துடன் போதைப் பொருள் பயன்பாட்டில் இருந்து இளைஞர் சமூகத்தை பாதுகாப்பதற்கு விஷேட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts: