அரசியல் தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க வேண்டியதில்லை – கூட்டமைப்பு அரசியலை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என நாமல் ராஜபக்ச வலியுறுத்து!
Wednesday, October 25th, 2023அமைச்சர்களை மாற்றுவதால் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியாது கூட்டமைப்பு அரசியலை ஜனாதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுவாக கூட்டமைப்பின் அரசியலின் போது அல்லது நாம் இணைந்து அரசியலை முன்னெடுக்கும் போதும் அரசாங்கத்தின் சார்ப்பில் ஏதேனும் தீர்மானம் எடுக்கப்படுமாயின் கட்சித்தலைவர்களுடனே கலந்து தீர்மானம் எடுக்கப்படும்.
கடந்த காலங்களிலே எடுக்கப்படும் சில தீர்மானங்களின் போது சிறிலங்கா பொதுஜன பெரமுன நிலைப்பாட்டை அறிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்ற நம்பிக்கை கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சியின் பலருக்கு இருக்கின்றது என தெரிவித்துள்ளார்
மேலும் அதன் பின்புலத்தில் தோற்றம் பெற்ற பிரச்சனையின் அடிப்படையில் சிறிலங்கா பொதுஜன பெரவினவுக்கும் சுதந்திரக்கட்சிக்கு இடையிலும் பிரச்சனை இடம் பெற்றதாக காண்பிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
எனினும் எமது சகோதர கட்சிகளுக்கு இடையில் மோதல் ஏற்படவில்லை. நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் தலைகளை மாற்றினாலும் பொறுப்புக்களை மாற்றினாலும் அந்தப்பிரச்சனைகள் தீரப்போவது இல்லை.
மேலும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவே பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதிக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக ஜக்கிய தேசிய கட்சி கூறுவதை நாம் கண்டோம் என தெரிவித்துள்ளார்.
நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல சஜித் பிரேமதாஸவுக்கும் அழைப்பு விடுத்தோம். சரத் பொன்சேகாவிற்கும் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் அழைப்பு விடுத்தோம். எனவே ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்றார். நாம் அவருக்கு அந்த கௌரவத்தை வழங்குவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதி என்ற அடிப்படையில் கூட்டமைப்பு அரசியல் முன்னெடுக்கும் போது அதில் இணைந்து செயற்படும் கட்சிகளுடன் அவர் இணக்கத்துடன் செயற்பட வேண்டும். அதனை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவருக்கு நாம் அரசியல் தொடர்பில் ஆலோசணை வழங்க வேண்டியதில்லை. அவர் எனது தந்தையுடன் அரசியல் செய்த ஒருவர், இருவரும் இரண்டு பக்கங்களிலும் இருந்து இழுத்துக்கொண்டதன் காரணமாகவே நல்லாட்சி அரசாங்கத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனால் இறுதியில் நாடே வீழ்ச்சியடைந்தது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாமல் போனது என தெரிவித்துள்ளார்
000
Related posts:
|
|