அரசியல் கைதிகள் இல்லை – அமைச்சர் தலதா!

Thursday, October 12th, 2017

இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவவரும் இல்லை என  நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் புதிய செயலாளராக காமினி செனெவிரத்ன தனது கடமைகளை பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

தற்போது பல நாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மேலும் சில நாடுகளுடன் இதுதொடர்பான உடன்படிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை சிறைக்கைதிகள் மற்றும் நாட்டிலுள்ள வெளிநாட்டு சிறைக்கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறையொன்றை எதிர்வரும் சில தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள மேலும் குறிப்பிட்டார்.

Related posts: