அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்ககோரி யாழ். சிறைச்சாலையில் எட்டுக் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்ககோரி இன்று திங்கட்கிழமை(08) காலை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 08 கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர் எனச் சிறைச்சாலை அத்தியட்சர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சிறு குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளே இன்று இன்று காலை 07 மணி முதல் சிறைச்சாலைக்குள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் மூன்று கைதிகளின் உறவினர்கள் அரசியல் கைதிகளாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனாவுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அவசரம் வேண்டாம் – வைத்தியர் ஹரித அலுத்கே!
விவசாய பொருளாதாரத் தை மேம்படுத்துவதே குறிக்கோள் - பாகிஸ்தான் மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் ஜ...
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்தது!
|
|