அரசியல் கைதிகளுக்கான சிறந்த ஆயுதம் தகவலறியும் சட்டமூலம்!

விசாரணைகள் ஏதுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறந்த ஆயுதம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் என தகவல் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
தகவலறியும் உரிமைச் சட்டமானது இலங்கைப் பிரஜைகள் அனைவருக்கும் உரித்துடையது.
இச்சட்டம் ஏனைய சட்டங்கள் அனைத்தையும் விட மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே இதனை சிறந்த ஆயுதமாக கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் தாங்கள் ஏன் இவ்வாறு காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என வினா எழுப்பலாம்.
இந்தியாவில் இச்சட்டத்தை பயன்படுத்தி சிறைக்கைதிகள் வினா எழுப்பியதன் மூலம் அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
எனவே இதனை சிறந்த ஆயுதமாக கொண்டு தமிழ் அரசியல் கைதிகள் தாங்கள் ஏன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என வினா எழுப்பி தீர்வைப் பெறலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|