அரசியல் கூட்டங்களால் கொரோனா தொற்று வேகமாகப் பரவுகிறது – பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

அரசியல் கூட்டங்களை நடத்துவதால் நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது உலகில் கொரோனாவின் அதிக ஆபத்து இருப்பதாகவும், ஒமிக்ரோன் பிறழ்வு நாடு மற்றும் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதாகவும் சங்கத்தின் தலைவரான உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தின் பலவீனமான நிலையால் வழமை போன்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேவையற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அநாவசியமான அரசியல் கூட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களால் நாடு மீண்டும் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|