அரசியல் குழப்பம் – மாணவர்களது சீருடை, புத்தகங்கள் வழங்குவதில் பாதிப்பு!

Wednesday, November 28th, 2018

அரச பாடசாலைகள் 3 ஆம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 30 ஆம் திகதி மூடப்படவுள்ள நிலையில் இன்னும் பாடசாலை மாணவர்களுக்கான புதிய புத்தகங்கள், சீருடைத் துணிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லையெனக் கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.

அடுத்த ஆண்டுக்காக 3 கோடி 97 இலட்சத்து 14 ஆயிரம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையால் அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தாமதமாகியுள்ளன.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஊடாக அச்சிடப்பட்டுள்ள புத்தகங்களில் முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் உரை காணப்படுவதால் அந்தப் புத்தகங்களை விநியோகிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லையென்றும் கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts: