அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிப்பு!

அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரிசீலனை அறிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேர்முகத் தேர்வில் தெரிவான கட்சிகளின் பெயர்களை அறிக்கையொன்றின் ஊடாக வெளியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த சில நாட்களாக தேர்தல்கள் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்றதுடன் அதில் 18 கட்சிகள் தகுதி பெற்றிருந்தன.
எவ்வாறாயினும், அதில் பெரும்பாலான கட்சிகள் நேர்முகத் தேர்வில் தேவையான காரணிகளை பூர்த்தி செய்யவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிதி மோசடிகளை விசாரிக்கும் ட்ரயல் அட்பார் நீதிபதிகள் நியமனம்!
அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலிய...
சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங...
|
|