அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
Monday, August 31st, 2020அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான முதற்கட்ட நேர்முக தேர்வுகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த வருடத்திற்காக 150 க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளன. இதில் 40 கட்சிகளின் விண்ணப்பங்கள் முறையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்யாத காரணத்தால் முதற்கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் முதற்கட்ட நேர்முகத் தேர்வுகள் கடந்த 29 ஆம் திகதி நிறைவடைந்துள்ளன. இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை விரைவில் நடைபெறும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் குறித்த செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் ஆணைக்குழு கூடி எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளது.
மேலும் குறித்த ஒரு கட்சி கடந்த 4 வருடங்களாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அப்படியிருந்தால் அந்த கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்வதற்கான இயலுமை உள்ளது.
அத்துடன் குறித்த கட்சி நான்கு வருடங்களுக்கான கணக்கறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இதுவரை 70 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Related posts:
|
|