அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

Tuesday, December 3rd, 2019

விசேட கூட்டமொன்றுக்காக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு  விடுத்துள்ளது.அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு நாளைய தினம் தேர்தல் ஆணைக்குழு இந்த அழைப்பினை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நாளை முற்பகல் 10.00 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த கூட்டம் நடாத்தப்படும் என ஊகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்தல் சட்டங்கள், காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் செய்தல் என்பன குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் பிரச்சார செலவுகளை வரையறுத்தல் மற்றும் அதற்கான புதிய சட்டங்களை உருவாக்குதல் போன்றன குறித்து தேர்தல் ஆணைக்குழு, கட்சிகளை தெளிவூட்டும் என குறிப்பிடப்படுகிறது.

Related posts: