அரசியல் இலாபம் தேடவேண்டாம்! – அரசியல் கட்சிகளிடம் அரசாங்கம் கோரிக்கை!

நேற்றையதினம் அவிசாவளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை வைத்து எந்தவொரு அரசியல் கட்சிகளும் அரசியல் இலாபம் தேடக் கூடாது என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனரட்ன –
இலங்கையில் மாத்திரமல்ல உலக நாடுகளில் உள்ள இராணுவ முகாம்களிலும் இதுபோன்று வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அண்மையில் இந்தியாவிலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.
எனவே அரசியல் கட்சிகள் இந்த சம்பவத்தை அரசியலாக்காமல் இருப்பதோடு அரசாங்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் தவிர்த்து கொள்ள வேண்டும்.
மேலும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
தபால் கட்டணங்கள் அதிகரிப்பு!
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாணசபைத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி!
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - சீனாவுடன் இருதரப்பு கடன் மறுச...
|
|