அரசியல்வாதிகளின் சுயநலத்தால் திரும்பிச் சென்றது இந்தியன் வீட்டுத்திட்டம் – ஜனாதிபதி!

மக்களின் ஏழ்மை நிலைக்கு மோசடி நிறைந்த அரசியல்வாதிகள் பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மன்னாரி நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இந்தியாவின் நிதியுதவியின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் காரணமாக இல்லாது போயுள்ளது.
ஐம்பதாயிரம் வீடுகளை அமைப்பதற்கு இந்திய வங்கியொன்றினால் கடன் வழங்கப்பட்டிருந்தது. அந்த வீடுகளை அமைப்பதில் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்திருந்தால், 25 ஆயிரம் வீடுகளையேனும் நிறைவுசெய்திருக்க முடியும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
அத்துடன், வடகிழக்கில் 90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
Related posts:
|
|