அரசியலில் இருந்து தான் ஓய்வுபெற போவதில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Thursday, October 1st, 2020

அரசியலில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் பத்திரிகை செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களிடம் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்: பிரதமர் அரசியலிலிருந்து ஓய்வு பெற போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. பிரதமர்: அரசியல்வாதிகள் எக்காலத்தில் ஓய்வு பெற்றனர்? நான் ஓய்வுபெற போவதில்லை. என அவர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: