அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது – சுவிட்ஸர்லாந்து!

Monday, October 10th, 2016

இலங்கையின் அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது என சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிரிஸ்டா மார்க்வோடர் கருத்து வெளியிட்டுள்ளார்.

கண்டியில் பௌத்த பீடாதிபதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், இலங்கையின் சகல தரப்பினரின் கருத்துக்களும் புதிய அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் புதிய அரசியலமைப்பின் உருவாக்கத்துக்கு இலங்கைக்கு தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையில் சிறந்த உறவுமுறை உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

maithi-with-switzerland-president

Related posts: