அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் – ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு!

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைத்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரினது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை தீர்மானிக்கும் நோக்கில் அரசாங்கம் குறித்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆழமாக பரிசீலிக்கும் என ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திருத்தம் அல்ல புதிய அரசியலமைப்பே தேவை- ஹக்கீம்!
இரட்டைக் குடியுரிமை பெற அதிகமானோர் விண்ணப்பம்!
விளையாட்டுத் துறையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுங்கள் - துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கு அ...
|
|